
Nutrition|ஊட்டச்சத்து

ஆதியிலே நாம் பழங்களையும் காய்கறிகளையும் உண்டோம் …
“பின்னும் தேவன்: இதோ பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது” என்றார்” (ஆதியாகமம் 1:29).
அற்புதமான ஆரோக்கிய உண்மை: 1483 ஆம் ஆண்டில் பிறந்த தாமஸ் பார் என்பவர் நம்பமுடியாத அளவுக்கு 152 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது!
அதாவது, முதலாம் எலிசபெத் மகாராணியாரின் 50 ஆண்டு ஆட்சிக்காலம் முழுவதும் உட்பட இங்கிலாந்தில் 10 மன்னர்களின் ஆட்சிகளை அவர் கண்டிருந்தார்.
1635 ஆம் ஆண்டு, தாமஸை முதலாம் சார்லஸ் என்ற மன்னர் தனது அரண்மனைக்கு அழைத்துவந்து, அந்த முதியவரால் எவ்வாறு அவ்வளவு நீண்ட காலம் வாழமுடிந்தது என்று விசாரித்தார்.
தான் பெரும்பாலும் உருளைக்கிழங்கு, பழங்கள், ஓட்ஸ் ஆகிய உணவுகளையே சாப்பிட்டு, எளிமையான விவசாயி வாழ்க்கையை வாழ்ந்ததாக தாமஸ் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, அரண்மனையில் கொடுக்கப்பட்ட ராஜ உணவுகள் வயதான தாமஸுக்குப் பழக்கமானதாக இல்லை.
அன்று இரவு உணவுவேளைக்குப்பிறகு, அவர் உடல்நிலை மோசமாகி இறந்துவிட்டார்.
இங்கிலாந்தின் மூத்த குடிமகனை அரண்மனையின் அருஞ்சுவை உணவுகளால் சாகடித்துவிட்டதற்காக சார்லஸ் மன்னர் மிகவும் வருந்தி, தாமஸின் உடலை வெஸ்ட்மின்ஸ்டர் அரசக் கல்லறைத் தோட்டத்திலேயே புதைக்கும்படி கட்டளையிட்டார், இன்றும் அவரது கல்லறையை அங்கே காணலாம்.
முதலில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உணவு எது?
நாம் சாப்பிடுகிற உணவுக்கும் நீண்டகாலம் பெலத்தோடு வாழ்வதற்கும் தொடர்பு இருப்பபதற்கு, தாமஸ் உயிருள்ள ஒரு சாட்சியாக இருக்கிறார்.
வேதாகமத்தின்படி முதலில் பழங்கள், தானியங்கள், கொட்டைகள் ஆகியவைகளை உண்ணும்படி ஆதாம்-ஏவாளிடம் தேவன் சொன்னார். தேவன் அவர்களிடம் காய்கறிகளை உண்ணும்படி சொன்னார். “வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்” ஆதியாகமம் 3:18. இதுதான் ஜலப்பிரளயம் வருமட்டும் வாழ்ந்த மக்களுக்கு தேவன் அளித்த முதல் உணவாக இருந்தது.
ஜலப்பிரளயத்தைத் தொடர்ந்து உலகம்முழுவதிலும் தாவரங்கள் அழிந்துவிட்டதால், முற்றிலும் தாவர அடிப்படையிலான உணவுப்பழக்கம் நோவாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் சாத்தியமற்றதாகிப்போனது. ஒரு நிலையான உணவு ஆதாரத்தை வழங்குவதற்காக, இறைச்சி சாப்பிட தேவன் அனுமதித்தார். இருப்பினும், உண்பதற்கேற்ற ஆரோக்கியமான மிருகவகைகளை தேவன் சுட்டிக்காட்டினார்; “சுத்தமானது” என்று அவற்றைக் குறிப்பிட்டார். (லேவியராகமம் 11;
உபாகமம் 14:3-21 பார்க்கவும்). சுத்தமான மிருகங்கள் பேழைக்குள் ஜோடிஜோடியாக செல்வதற்குப்பதிலாக ஏழுஏழாக பேழைக்குள் சென்றன.
மாமிசம் புசிப்பது அந்தச் சமயத்தில் அவசியமாக இருந்தபோதிலும், நீண்ட ஆயுள்நாளை அது வெகுவாகக் குறைத்தது. ஜலப்பிரளயத்திற்குமுன், மனித ஆயுட்காலம் சுமார் 900 ஆண்டுகள் நிலையாக இருந்தது.(ஆதியாகமம் 5). ஜலப்பிரளயத்திற்குப்பிறகு நோவாவின் மகன் சேம் 600 ஆண்டுகள்மட்டுமே வாழ்ந்தார். அதன்பிறகு ஒன்பது தலைமுறைகளே கடந்த நிலையில் ஆபிரகாம் 175 வருடங்கள்மட்டுமே வாழ்ந்தார். இன்று சராசரி ஆயுட்காலம் ஜலப்பிரளயத்திற்குமுன் வாழ்ந்த நமது முன்னோர்களின் ஆயுள்காலத்தில் ஒரு சிறு பின்னமளவிற்குமட்டுமே உள்ளது. பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், முழுத் தானியங்கள் நிறைந்த ஓர் உணவுப்பழக்கம் நம் முன்னோர்களுடைய நீண்டஆயுளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், அந்த ஆதிகால உணவுமுறைக்குத் திரும்புவது இன்று நம் வாழ்நாளை நீட்டிக்கும் அல்லவா?
Amazing Health Fact: மாமிச உணவைச் சாப்பிடுவதற்கு தேவன் அனுமதித்தாலும், அதன் உயிராகிய இரத்தம் மாம்சத்தில் இருப்பதால், இரத்தத்தைச் சாப்பிடவேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். (ஆதியாகமம் 9:4; லேவியராகமம் 3:17; 1 சாமுவேல் 14:32-34). ஆப்பிரிக்க நாட்டின் மாஸை இனமக்களைப் போன்ற சில ஆதிவாசிகள் இரத்தத்தை தங்கள் உணவில் ஒரு பகுதியாக வைத்துள்ளார்கள். ஐம்பது மாஸை இன ஆண்களின் பிரேதங்களைப் பரிசோதனைசெய்து பார்த்ததில், அவர்களுக்கு பெரிய அளவில் இதயவியாதி இருந்தது தெரிந்தது. அவர்களது தீவிர உடலுழைப்பு வாழ்க்கைமுறை அவர்களுக்கு சற்று பாதுகாப்பைக் கொடுத்திருந்தாலும், இந்த நவீன உலகில் அவர்களது சராசரி ஆயுட்காலம் மிகவும் மோசமாகவே உள்ளது (பெண்களுக்கு 45 வயதும் ஆண்களுக்கு 42 வயதுமாக உள்ளது)
உணவை விழுங்கியபின் என்ன நடக்கிறது?
சரியான உணவுமுறை சரியான செரிமானத்திலிருந்து துவங்குகிறது.உணவை மெல்லுவது இந்தச் செயல்முறையைத் துவங்குகிறது. ஆகவே உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். உணவு நம் வாயில் இருக்கும்போதே, உமிழ்நீராகிய அமிலேஸ் எனும் நொதி அந்த உணவை உடைக்க ஆரம்பிக்கிறது.
விழுங்கப்பட்ட உணவை இரைப்பைப் பாகு என்கிறோம். உணவுக்குழாயின் வழியாக வயிற்றுக்கு இரைப்பைப்பாகு செல்கிறது. அங்கே வயிற்றிலுள்ள அமிலம் ஒரு சிக்கலான இரசாயன செரிமான வேலையைத் தொடருகிறது.
இந்த வேலை முடிந்தவுடன், சிறுகுடலுக்கு இரைப்பைப்பாகு செல்கிறது, அங்கே வேறு ஒரு நொதி கார்போஹைடிரேட்டை உடைக்கிறது. பித்தப்பையிலிருந்து சுரக்கிற பித்தநீர் அங்கே கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது; கணையத்திலிருந்து வருகிற நொதிகளும் அதை மேலும் சிதைக்க உதவுகிறது. அந்த இரைப்பைப்பாகு அங்கிருந்து சிறுகுடல்வழியே பெருங்குடலுக்குச் செல்லும்போது, பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை சிறுகுடல் உறிஞ்சிவிடும். இந்த நிலையில், செரிமான வேலை ஏறக்குறைய முடிந்துவிடுகிறது. அதன்பிறகு மீதமுள்ள செயல்பாடுகளை நீங்களே அறிவீர்கள்.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: நீங்கள் சாப்பிடுவதற்குமுன்பே செரிமான வேலை ஆரம்பித்துவிடுகிறது.எச்சிலை ஊறச்செய்கிற உங்களுக்குப் பிடித்தமான ஒரு உணவின் வாசனையை நுகரும்போது, அது துவங்குகிறது. அடுத்த 29 மணி நேரத்திற்குமேல் அது தொடர்கிறது.
ஊட்டச்சத்துபற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புசத்து, வைட்டமின்கள், கனிமங்கள் என்பவையே உணவின் ஐந்து அடிப்படையான மூலக்கூறுகள் ஆகும்.
கார்போஹைட்ரேட்களில் மாவுசத்து, சர்க்கரைசத்து, நார்சத்து ஆகியவை உள்ளன. மாவுசத்தும் சர்க்கரைச்சத்தும் உடலுக்கான முக்கிய எரிபொருளான குளுக்கோசாக மாற்றப்படுகின்றன. தாவரவகை உணவுகளில் காணப்படுகிற நார்சத்தானது குடலைச் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான சக்கையாகச் செயல்படுகிறது.
புரதங்கள் சிதைந்து, அமினோ அமிலங்களாக மாறுகின்றன; இவற்றால்தாம் ஹார்மோன்கள், நொதிகள், தசைத்திசு போன்றவை உருவாகின்றன.
கொழுப்புகளில் அதிக ஆற்றல் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைட்ரேட்டைவிட ஒரு கிராமுக்கு இருமடங்கு அதிக கலோரிகளை அவை வழங்குகின்றன. பிற்பாடு உபயோகிப்பதற்காக, கொழுப்புச்சத்தைச் சேமித்துவைக்க முடியும். மூன்று வகையான இயற்கையான கொழுப்புகள் உள்ளன. அவை ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு, பல்நிறைவுறாக் கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு ஆகும். நிறைவுறாக் கொழுப்புகள்தாம், குறிப்பாக தாவரங்களிலிருந்து கிடைப்பவைதாம், அதிக ஆரோக்கியமிக்கவை ஆகும். சுத்திகரிக்கப்பட்ட நிறைவுற்ற கொழுப்புகள் அடங்கிய உணவுகள் பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன.
வைட்டமின்களும் கனிமங்களும் நமது உணவின் இன்றியமையாத ஊட்டச்சத்துகள் ஆகும். மிகக்குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்டவையும், ஊட்டச்சத்துகள் நீக்கப்படாதவையுமான உணவுகளில்தாம் இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தாவரங்களில்மட்டுமே காணப்படும் தாவரவேதிப்பொருட்கள் பல நோய்களைத் தடுக்க உதவுகின்றன; இவைகூடுதல் நன்மையாக அமைகின்றன.
உணவில் சிறிதளவுகூட கொலஸ்ட்ரால் தேவையில்லையா? கொலஸ்ட்ரால் பல்வேறு வழிகளில் கிடைக்கிறது. உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்பது கொலஸ்ட்ராலில் ஆரோக்கியமான ஒரு வகை; அது கெட்ட கொலஸ்ட்ராலை உடலிலிருந்து அகற்றி, மறுசுழற்சிக்காக அதை கல்லீரலுக்குக் கொண்டுசெல்ல உதவுகிறது.
நல்ல, கெட்ட கொலஸ்ட்ரால்களை அவற்றின் பெயரை வைத்தே ஞாபகம்வைக்கலாம்: உயரடர்த்தி கொலஸ்ட்ரால் “உயர்வானது”, குறையடர்த்தி கொலஸ்ட்ரால் “குறையுள்ளது”, மிகுகுறையடர்த்தி கொலஸ்ட்ரால் “மிகுந்த குறையுள்ளது”. கொலஸ்ட்ரால் மாமிச உணவிலும் பால், முட்டைகள் போன்ற விலங்குவகைப் பொருட்களிலும்மட்டுமே காணப்படுகிறது…
மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!