
N.E.W.S.T.A.R.T.
Water|தண்ணீர்

“தோட்டத்துக்குத் தண்ணீர்பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.” (ஆதியாகமம் 2:10.).
அற்புதமான ஆரோக்கிய உண்மை: 100 வருடங்களுக்குமுன்பு, சவுதி அரேபியாவில் ஒரு மணல்மேட்டில் எலும்புக் குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மனிதன் அந்தப் பாலைவனத்தில் வழிதவறி இறந்திருக்கவேண்டும். அவனுடைய கந்தலான ஆடையின் பைக்குள் ஒரு குறிப்பு இருந்தது. அதில் “தாகத்தால் மரிக்கிறேன்; இதற்கும்மேல் என்னால் பயணத்தைத் தொடரமுடியாது” என்று எழுதி இருந்தது. இறந்துபோன அந்த மனிதன் ஒரு கூடாரம்போட்டு, தண்ணீர் இல்லாததினால் அங்கு உட்கார்ந்தபடியே மரித்திருந்தான். ஆனால் வருத்தம் என்னவென்றால், அந்த மனிதனின் எலும்புக்குவியல் இருந்த இடத்தருகிலேயே ஒரு பாலைவனச் சோலை இருந்தது; அங்கே ஊற்று ஒன்றும் இருந்தது; அதிலிருந்து சில நூறு மீட்டருக்கு அப்பால் தாகத்தால் மரித்திருந்தான்.
இதைப்போலவே இன்று, தங்களைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், இலட்சக்கணக்கானோர் உடலில் நீரின்றி மெதுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள்.
நம் உடலில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?
உடலில் போதுமான தண்ணீர் இல்லையென்றால், என்ன நடக்கும்?
உண்மையில் நமக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?
நாம் தாகமாக இருக்கும்போதுமட்டும் தண்ணீர் குடித்தல் ஏன் போதாது?
தண்ணீர் குடிக்க, தாகம் எடுக்கும்வரை காத்திருக்கிறீர்களா?
ஏதாகிலும் குடிக்கவேண்டுமென்று உங்கள் மூளை கட்டளையிடுவதற்கு முன்பே உடலில் தண்ணீர் குறைந்துவிடுகிறது என்பது நிபுணர்களின் கருத்து.
நீரிழப்புக்கான சில ஆரம்ப அறிகுறிகள் யாவை?
மிதமான நீரிழப்பால் உடலின் எடையில் 1 முதல் 3 சதவிகிதம் வரை குறைகிறது.
- தலைவலி
- சோர்வு
- பசியிழப்பு
- சிவந்த தோல்
- தாங்கமுடியாத வெப்பம்
- தலைச்சுற்று
- வாயும் கண்களும் உலர்தல்
- தோல் நெகிழ்ச்சி குறைபாடு
- பசி என்று நினைக்கத் தோன்றுகிற வயிற்றுவலி
- உடல் எடை அதிகரிப்புக்கு வழிநடத்தும் மெதுவான வளர்ச்சிதை மாற்றம்.
Amazing Health Fact: Simple filtration, reverse osmosis, and steam distillation are some of the methods commercial water suppliers use to purify water. Some also add minerals to improve taste. One way to improve the taste of your drinking water is to add a squeeze of fresh lemon or lime juice.
அற்புதமான ஆரோக்கிய உண்மை:
வடிக்கட்டுதல், எதிர்ச் சவ்வூடுபரவல், காய்ச்சி வடித்தல் ஆகியவை வணிக ரீதியில் நீரைச் சுத்தப்படுத்தும் முறைகளாகும். சிலர் சுவையேற்றுவதற்கு சில கனிமங்களைக் கலக்கின்றனர். குடிதண்ணீரை ருசியேற்ற எலுமிச்சைப் பழத்தின் சிறிய துண்டையோ, எலுமிச்சைச் சாற்றையோ அதில் சேர்க்கலாம்.
மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!