N.E.W.S.T.A.R.T

Trust in God|நம்பிக்கை

“அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் (ரோமர் 12:3).

அற்புதமான ஆரோக்கிய உண்மை: மருந்துப்போலி என்பது பார்ப்பதற்கு அசல் மருந்துபோலவே இருக்கும்; ஆனால் அது உண்மையில் வண்ணம் கலந்த நீர் அல்லது மாவுப்பொருள் மாத்திரையாக இருக்கும்; அதற்கு மருத்துவக் குணம் எதுவும் இருக்காது. பல சமயங்களில் ஒரு நோயாளிக்கு, அவரது வியாதி குணமாகிவிடும் என்கிற நம்பிக்கையைப் வலுப்படுத்துவதற்காக இந்த மருந்துப்போலிகளைக் கொடுக்கிறார்கள். புதிய மருந்துகளின் செயல்திறனைச் சோதிப்பதற்காகவும் மருந்துப்போலிகளைப் பயன்படுத்துகிறார்கள். நோயாளிகள் தங்களுக்குச் சுகம்கிடைக்கும் என்று உண்மையாக நம்பி, ஒரு பொருளைச் சாப்பிடும்போது, நோயின் அறிகுறிகள் குறைவதாக அல்லது முற்றிலும் மறைவதாக ஆராய்ச்சி தெளிவாகக் காண்பிக்கிறது. மருக்கள்மேல் பிரகாசமான நிறமுடைய, ஆனால் மருத்துவத் தன்மையற்ற சாயத்தைப் பூசி, அந்தச் சாயம் மறையமறைய மருக்களும் மறைந்துவிடும் என்று மருத்துவர்கள் உறுதியளித்து, அவற்றை வெற்றிகரமாக அகற்றியதாக ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.

ஆஸ்துமாகுறித்த ஓர் ஆராய்ச்சியில், நோயாளிகளிடம் அவர்கள் இப்போது நீங்கள் ஆற்றல்மிக்க ஒரு சுவாசக்குழாய் தளர்த்தியை உள்ளிழுக்கிறீர்கள் என்று சொல்லி, மருத்துவத் தன்மையற்ற பொருளைக் கொடுத்து சுவாசிக்கச் சொன்னபோது, மூச்சுக்குழாய்கள் விரிவடைந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஒரு மனிதனுடைய நம்பிக்கைகள் எவ்வாறு உடல்ரீதியாக அவரை மேம்படுத்துகிறது என்பதற்கு நன்கு ஆவணப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

 

நம்பிக்கைக் காரணி

இயேசு தாம் குணமாக்கியவர்களிடமெல்லாம் சொன்ன ஒன்றை விளக்குவதற்கு இந்த நிகழ்வு உதவியாக இருக்கும். “மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.” மாற்கு 5:34.

உண்மையில், மருத்துவர்கள்மீதும், மருந்துகள்மீதும் ஒருவர் வைக்கிற நம்பிக்கை, இப்படியொரு ஆழமான தாக்கத்தை உண்டுபண்ண முடியுமென்றால், தேவன்மேல் நம்பிக்கை வைத்தால், அது எவ்வாறு நம் உடலிலும் ஆவிக்குரிய நலனிலும் மிகவும் ஆற்றல்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்? “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 9:23) இந்த “நம்பிக்கைக் காரணி” பற்றிய ஆய்வுகளின் முக்கிய விஷயம் என்னவென்றால், வியாதி சுகமாகும் என்று நோயாளியும் மருத்துவரும் சேர்ந்து நம்புவார்களானால், வியாதி இலகுவாகக் குணமாகும்.

அற்புதமான ஆரோக்கிய உண்மை: ஏழு வருடங்கள் அதிகம் வாழவிரும்புகிறீர்களா? 21,000 பேரிடம் செய்த நாடுதழுவிய ஓர் ஆய்வுபற்றி ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை பின்வருமாறு தெரிவிக்கிறது. வாரத்திற்கு ஒருமுறைக்குமேல் பிரார்த்தனையிலும் பக்திக்கூட்டங்களிலும் ஈடுபட்டவர்களுக்கு அவ்வாறு கூட்டங்களில் ஈடுபடாதவர்களைவிட ஏழு வருடங்கள் அதிக ஆயுள்காலம் இருக்கிறதாம்.

சமூகக் காரணி: ஆரோக்கியமான மக்களுக்கு மக்கள் தேவை

“தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல.” என்று கூறினார்.(ஆதியாகமம் 2:18)

ஆரம்பத்திலிருந்தே, மனிதனை ஒரு சமூக ஜீவியாகத்தான் தேவன் உண்டாக்கினார். ஆரோக்கியமான, நம்பிக்கைமிக்க உறவுகள் தேவைப்படுகிற விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம்.

நீங்கள் எப்போதாவது பத்துக் கற்பனைகளை உற்றுக் கவனித்தது உண்டா? முதல் நான்கும் தேவனோடு நமக்குள்ள உறவைப்பற்றியது; கடைசியாக உள்ள ஆறும் நம் சகமனிதர்களோடு நாம் நம்பிக்கைமிக்க உறவைப் பேண உதவுகிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து பத்துக்கற்பனையைப் பின்வரும் இரண்டு கற்பனைகளில் சுருக்கிச் சொன்னார்; அதாவது, தேவனிடத்தில் அன்புகூர வேண்டும்; அடுத்து சகமனிதரிடத்தில் அன்புகூர வேண்டும். மத்தேயு 22:37-40.

ஆச்சரியப்படும் வகையில், நவீன ஆராய்ச்சி கூறுவது என்னவென்றால் பெரும்பாலான நோய்கள் மக்களிடையே நம்பிக்கை முறிவதால் உண்டாகிறதாம்.அதைவிடமுக்கியமாக, தேவனிடத்தில் நம்பிக்கைவைப்பது குணமாக்கும் தன்மையுடையதாக மருத்துவத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. 

ஆகவேதான் டயர்களை மாற்றுவதுபோல விவாகரத்து அதிகம் காணப்படுகிற ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும், தனிமையில் இருப்பவர்கள் வானுயரக் கட்டடங்களில் தனியே வாழ்ந்துவருவதும் மிகவும் வருத்தகரமானதாக உள்ளது. தொலைக்காட்சி 

அற்புதமான ஆரோக்கிய உண்மை: திருமணம்செய்யாதவர்கள் காலத்திற்கு முன்னரே மரிக்கிற ஆபத்து அதிகம் இருப்பதாக அமெரிக்காவில் நடந்த ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. விவாகரத்தானவர்களும் பிரிந்திருப்பவர்களும் சீக்கிரமே மரிப்பதற்கு 27 சதவிகிதம் அதிக வாய்ப்பிருக்கிறது. திருமணமான ஆண்கள் திருணமாகாத ஆண்களைவிடப் பாதியளவும், விவாகரத்தான ஆண்களைவிட மூன்றில் ஒரு அளவும் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்புள்ளது. இறப்புவீதத்தில் சமூகத் தனிமைப்படுத்துதல் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

நம்மை தேவனோடும் சமுதாயத்தோடும் வரலாற்றுரீதியாக இணைப்பவை திருச்சபையும் குடும்பமும் ஆகும்; இரண்டுமே ஆதியாகமத்தில் அறிமுகமாக்கப்பட்டன.

திருச்சபை ஆராதனைகளில் தவறாமல் கலந்துகொள்வதன்மூலம் தேவனில் நம்பிக்கையும், பிறரிடம் ஐக்கியமும் வைப்பவர்களுக்கான நன்கு அறியப்பட்ட சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!