
N.E.W.S.T.A.R.T
Air|காற்று

“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7).
Amazing Health Fact: கடந்த நூற்றாண்டில், மனிதன் சில கடினமான சுற்றுச்சூழல்களை மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளான்; ஆழமான சமுத்திரங்களை ஆராய்ந்திருக்கிறான்; உயர்ந்த மலைகளில் ஏறியிருக்கிறான்; விண்வெளிக்கும் சென்று சாதனைபடைத்திருக்கிறான். ஆனால் இந்தச் சாதனைகளில் எதுவும் சாத்தியமாவதற்குமுன்னரே ஒரு சவாலை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது, அந்தச் சாதனையாளர்கள் தாங்கள் சுவாசிப்பதற்குத் தேவையான காற்றை தங்களோடு எடுத்துச்செல்லக் கற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது.
சுவாசத்தை ஊதி, ஜீவாத்துமா ஆக்குதல்.
காற்றைப்பற்றி ஆராய்வது ஏன் முக்கிய விஷயமாக இருக்கிறது?
ஆக்ஸிஜன் நமது உடலின் மிக முக்கியமான தேவை. காற்றில் ஆக்சிஜன் 20 சதவீகிதம்மட்டுமே இருப்பினும், நாம் உயிர்வாழ உதவுகிற இந்தக் காற்றானது சுவாசத்தின்போது நுரையீரல்களுக்குள் செல்கிறது. பிறகு ஆக்சிஜன் இரத்த ஓட்டத்தில் கலக்கிறது; அங்கே அது இரத்தச் சிவப்பு அணுக்கள்மூலமாக உடல்முழுவதும் செல்கிறது. உடலில் ஆற்றலுக்கு முக்கிய ஆதாரமாகிய குளுக்கோஸ் சம்பந்தப்பட்ட வேதிவினைகளுக்கு இது உதவுகிறது. ஆக்ஸிஜன் இல்லாவிட்டால், ஆற்றல்தருகிற குளுக்கோஸ் பயனற்றதாகிவிடும்.
உள்ளே ஒரு நெருப்பு
குளுக்கோசுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையே நடக்கிற வேதிவினையை எரிகின்ற ஒரு மெழுகுவர்த்திக்கு ஒப்பிடலாம். ஆக்சிஜன் குறைந்தால் மெழுகுவர்த்தி “அணைந்துவிடும்.” அதுபோலவே ஆக்சிஜன் அளவு உடலில் குறையுமானால், உங்களுடைய உடலின் “வெளிச்சம் அணைந்துவிடும்”. (சுயவுணர்வை இழந்துவிடுவீர்கள்). எரிகின்ற மெழுகுவர்த்தியைப்போல, உங்கள் உடலிலும் எரிதலின் கிளைவிளைவான புகை உருவாகிறது.நீங்கள் இந்தப் புகையைப் பார்க்கமுடியாது; ஆனால் ஒவ்வொரு முறை நீங்கள் சுவாசம் விடும்போதும், கரியமில வாயுவும் நீராவியும் வெளியேறி, காற்றுடன் கலந்துவிடுகிறது.
எதிர்மறையான ஒன்று எவ்வாறு எப்படி நேர்மறையானதாகும்?
“சுத்தமான” காற்றைச் சுவாசிப்பதால் உண்மையாகவே ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் எப்போதாவது கடற்கரை ஓரத்தில், அல்லது இடியுடன் கூடிய மழைக்குப்பின்பு நடந்துசென்றது உண்டா? அப்போது புத்துணர்வை உணர்ந்தது நினைவில் இருக்கிறதா? அதற்குக் காரணம் நீங்கள் எதிர்மின் அயனிகள் நிறைந்த காற்றைச் சுவாசித்தாக இருக்கலாம்; இது கதீர்வீச்சு காணப்படும் வெளியிடங்களில் இயற்கையாகவே காணப்படும் (சூரிய ஒளி, அடர்ந்த காடுகள், மலைகள், கொந்தளிப்பான நீர்நிலைகள், இடியுடன் கூடிய மழைக்குப் பிறகான இடங்கள் ஆகியவற்றில்).
நன்றாக சுவாசிக்க, நீங்கள் ஏதாவது செய்யமுடியுமா?
நல்லவேளையாக சுவாசிப்பது இயல்பான ஒன்று; ஆனால் பலருக்கு தவறான சுவாசப்பழக்கங்கள் உள்ளன; அவர்கள் தங்கள் நுரையீரல்களை திறம்படப் பயன்படுத்துவதில்லை.வயிற்று உறுப்புகளிலிருந்து நுரையீரலைப் பிரிக்கும் தசையாகிய உதரவிதானத்தை சுவாசித்தல் இறங்கச்செய்து, நுரையீரலை விரிவடையச் செய்யவேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது, அடிவயிற்றுத் தசைகளைத் தளரச்செய்வதால், இதைச் சாத்தியமாக்கலாம்.இவ்வாறு செய்து நுரையீரலின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் விரிவடையச் செய்தால், நுரையீரலின் செயல்பாடு அதிகரிக்கும்; அதனால் “சுவாசம் ஆழமாகும்”; ஆக்சிஜன்-கரியமிலவாயு பரிமாற்றம் பயன்மிக்க வகையில் இருக்கும். ஆழமாகச் சுவாசித்தல் சில வகை நிமோனியா வியாதிகளைத் தடுக்க இலகுவான வழிமுறையாகும்.
அற்புதமான ஆரோக்கிய உண்மை: எதிர்மின் அயனிகளின் எண்ணிக்கையை உங்கள் வீட்டில் “அதிகரிக்க” விருப்பமா? வீட்டிற்குள்ளே அயனிகளை உருவாக்கக்கூடிய அயனியாக்கிகள் பல சந்தையில் உள்ளன. ஆனால், வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் ஓசோனையும் விரும்பத்தகாத சில வளிமண்டல ஒற்றை மின்னணு உருபுகளையும் சில கருவிகள் உருவாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பான மூல ஆதாரம் இயற்கைமட்டுமே. தொட்டிகளில் வளர்க்கிற செடிகள் இயற்கையாகவே ஆக்சிஜனையும் எதிர்மின் அயனிகளையும் அதிகரிக்கின்றன; அதேசமயம் கரியமில வாயுவைக் குறைக்கின்றன.
மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!