
N.E.W.S.T.A.R.T
Exercise|உடற்பயிற்சி

“தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து,
அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.” (ஆதியாகமம் 2:15).
அற்புதமான ஆரோக்கிய உண்மை: வில்மா ருடால்ஃப் எனும் சிறுமி தன் நான்கு வயதில் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டாள்; அதனால் அவளது இடதுகால் செயலிழந்துபோனது. உதவியில்லாமல் அவளால் நடக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
ஆனால், வில்மா மனம் தளரவில்லை. அவள் தமது முடமான மூட்டுக்குப் பயிற்சிகொடுக்க முடிவுசெய்தாள். தனது ஒன்பதாவது வயதில் தனது காலில் மாட்டப்பட்டிருந்த உலோகச் சட்டத்தை அகற்றிவிட்டு, அதன் உதவியில்லாமல் நடந்து, மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தினாள்.
தனது 13 வயதில் வில்மா ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளத் தீர்மானித்தாள். அவள் பந்தயத்தில் கலந்துகொண்டு, கடைசியாகத்தான் வந்தாள். அடுத்த சில வருடங்கள் கலந்துகொண்ட அனைத்து ஓட்டப்பந்தயங்களிலும் கடைசியாக வந்தாள். முயற்சியைக் கைவிடும்படி அனைவரும் கூறினார்கள். ஆனால், அவளோ தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தாள். பிறகு ஒருநாள் அவள் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றாள். பின்னர், மற்றொன்றில் வெற்றிபெற்றாள். மீண்டும்மீண்டும் வெற்றிபெற்றாள். இறுதியில், ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்றாள்.
வில்மா தன் உடல்நலிவையும் தாண்டி, செயல்படத் தீர்மானித்து, வெற்றிபெற்றாள். உங்கள் சரீரமும் ஓர் அதிசய இயந்திரம்; ஆனால் அதனை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதை இழந்துவிடுவீர்கள்.
ஆதாம் ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது, அவருக்குச் சரியான உடற்பயிற்சி இருந்தது. தோட்டவேலை என்பது முழு உடலையும் இயங்கவைக்கிற பயனுள்ள உடற்பயிற்சியாகும்! அப்படியிருந்தும் அந்த நிலை நீடித்து இருக்கவில்லை, ஏனெனில், பாவத்தால் வியாதியும் மரணமும் வர வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.
வேதாகமத்தின்படி, மனித இனத்தின் ஆதி உடற்பயிற்சியும் மாற்றமடைந்து விட்டது. ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளர், அவ்வப்போது உடற்பயிற்சித் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதுபோல் தேவனும் ஆதாமின் ஆதி உடற்பயிற்சித் திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். “பூமி உன்நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்: நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய், உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்.” என்றார். ஆதியாகமம் 3:17, 19. ஆதாமின் “உடற்பயிற்சி” இப்போது கடுமையானது; ஏனென்றால் ”வருத்தத்தோடு,” “வேர்வை சிந்தி” பிரயாசப்பட வேண்டியதாகிவிட்டது.
ஆனால் இந்த வேதப்பகுதியை உன்னிப்பாகக் கவனியுங்கள். ஆதாமின் உடற்பயிற்சியின் தீவிரம் “ஆதாமுக்காகவே” அதிகமாக்கப்பட்டது. கடினமாகவும் வியர்வை சிந்தியும் செய்யப்படுகிற உடற்பயிற்சிகளால் இன்றும் பிரயோஜனமான நன்மைகளைப் பெறமுடியுமா?
- உடற்பயிற்சி உங்களுக்கு உதவுகிற வழிகள்:
- கலோரிகளை எரிக்கிறது.
- உடல் பெலத்தையும் தாங்குதிறனையும் அதிகரிக்கிறது.
- நலமாக உணரவும், அதிக ஆற்றலைப் பெறவும் உதவுகிறது.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மகிழ்ச்சியாக, நீண்டகாலம் வாழ உதவுகிறது.
இந்த அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு, உடலியங்கியலில் உடற்பயிற்சிகுறித்த அடிப்படைப் புரிதல் வேண்டும்.
மிகச்சிறந்த உடற்பயிற்சித் திட்டம் என்ன?
இரண்டு வகையான தசைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆக்சிஜன் குறைவாகத் தேவைப்படுகிற காற்றுவேண்டா உடற்பயிற்சிகளில் சம்பந்தப்பட்ட தசைகள் ”விரைந்து சுருங்கும்” தசைகள் எனப்படுகின்றன. உடல்வலுவை அதிகரிப்பதற்கு, இந்தத் தசைகள் இதற்குமுன் செயல்படத் தேவைப்படாத ஒரு வேலையில் இவற்றை ஈடுபடுத்தவேண்டும். இந்த தசைகள் மீண்டும் அதே பணியை மேற்கொள்ள அவசியமாகும்போது அதைச் செய்யும்படி வலுவடைய “கற்றுகொண்டு” விரிவடைகின்றன. குறைந்த நேர இடைவேளைக்குள் அதிக எடையைத் தூக்குவதற்கு இந்தத் தசைகளை மையமாகவைத்தே எடைதூக்கும் பயிற்சிகள் செய்யப்படுகின்றன.
“மெதுவாகச் சுருங்கும்” தசைகள் தாங்குதிறன் செயல்பாடுகளைச் செய்ய உதவுகின்றன. ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிற உயிர்வளி உடற்பயிற்சிகளில் அவை உபயோகப்படுகின்றன. அவை “தடித்து வலுப்பதில்லை” என்றாலும், ஓரளவு கலோரிகளை எரிப்பதற்கு உதவுகின்றன. சிறந்த உடற்பயிற்சி திட்டத்தில் இந்த இரண்டு விதமான தசைகளுக்கும் பயிற்சி இருக்கும். தாங்குதிறனையும் வலுவையும் நோக்கமாகக் கொண்டு செய்யப்படுகிற பயிற்சிகள் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்; கொழுப்பை எரிக்கும்; இரத்தநாள அமைப்பை வலுப்படுத்தும்; இன்னும் பல நன்மைகள் உண்டு!
அற்புதமான ஆரோக்கிய உண்மை: இதைப் பயன்படுத்தவும்; ஆனால் சாப்பிடவேண்டாம். சிவப்பு இறைச்சியானது சிவப்பாக இருக்கக் காரணம் அது 2ஆம் வகை தசை நாரினால் ஆனது. அதற்கு ஆக்சிஜன் நிறைந்த இரத்தம் அதிகளவில் தேவைப்படுகிறது. சிவப்பிறைச்சி உண்பதால், இதயநாள நோயும் பெருங்குடல் புற்றுநோயும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன …
மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!