N.E.W.S.T.A.R.T

Rest|ஓய்வு

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.” (ஆதியாகமம் 2:21, 22).

அற்புதமான ஆரோக்கிய உண்மை: ஒரு மணி நேரம் தூக்கத்தை இழப்பது நெடுஞ்சாலைகளில் 8 சதவீதம் விபத்துகள் அதிகரிக்கக் காரணமாகிறது – ஆனால், ஒரு மணி நேரம் கூடுதலாகத் தூங்குவது 8 சதவீதம் அந்த அபாயத்தைக் குறைக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இது உண்மை! ஒவ்வொரு வருடமும் கோடைப்பகல் சேமிப்பு நேரம் மாறும்போது இது நிகழ்கிறது.

ஏனெனில் 18 மணி நேரம் விழித்திருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது 300 மிலி மதுபானம் குடித்தபிறகு வாகனம் ஓட்டுவதற்குச் சமம். அதுவே 24 மணி நேரம் ஒரு ஓட்டுநர் விழித்து ஓட்டும்போது, கிட்டத்தட்ட 750 மிலி மது குடித்தவரின் செயலுக்குச் சமமாக இருக்கும். சரியான செயல்திறனுக்கு எட்டு மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம்.

வேதாகமத்தில் தூக்கத்தைக்குறித்த முதல் குறிப்பானது ஆழமான, ஆக்கப்பூர்வமான தூக்கத்தைப் பற்றியதாகும்.. ஆதாம் அந்தத் தூக்கத்திலிருந்து எழுந்தபோது, புத்துணர்வோடு, புத்துயிரோடு, … திருமணமானவராக எழுந்தார். அது முற்றிலும் புதிய வாழ்க்கையாக இருந்தது; மனிதகுலத்தின் எதிர்காலத்தில் அந்த முதல் தூக்கம் முக்கியப் பங்காற்றியது.

உண்மை என்னவெனில், பாவம் இல்லாத உலகில்கூட, ஒரு மனிதனுக்குத் தூக்கம் அவசியம் என்றும், இரவுவேளைதான் தூங்குவதற்கான சரியான நேரம் என்றும் தேவன் அறிந்திருந்தார். “ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.” ஆதியாகமம் 28:11

ஓய்வளிக்கும் தூக்கத்தின் முக்கியத்துவம்பற்றி குறிப்பாக இந்தப் பூரணமற்ற, பரபரப்பான உலகத்தில் நமக்கு நினைவூட்டவேண்டியது அவசியமாகிறதா?

Amazing Health Fact: புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகிறது. ஆனால் அதே குழந்தை, தான் பிறந்த முதல் வருடத்தில் தன் பெற்றோரின் 700 மணி நேர தூக்கத்தை இழக்கச்செய்யலாம்.
 

தூக்கம் வராததற்குக் காராணமாக உள்ள பிரச்சினைகள் என்ன?

6 கோடி அமெரிக்கர்கள் தூக்கம் வராமல் அவதிப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. செயற்கையான விளக்குகள், தொலைக்காட்சி, இணையதளம், காபி மோகம் போன்றவற்றால் இன்று மக்கள் தங்கள் முன்னோர்கள் தூங்கியதைவிட ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்குகின்றனர். இந்தப் புள்ளிவிரபம் ஒருவேளை அதிர்ச்சிதரும் செய்தியாக இல்லாமலிருக்கலாம்; ஆனால் உடல் குணமாவதில் சரியான தூக்கம் முக்கியப் பங்காற்றுவதை யோசிக்கும்போது, அமெரிக்கர்கள் நோய்நிறைந்த நிலைக்குள் செல்வதுகுறித்த ஓர் எச்சரிக்கை அழைப்பாக இது உள்ளது. .

தூக்கம் என்பது ஒரு செயல்பாடு.
தூக்கத்தில் உடல் செயல்படாமல் இருக்கிறது என்பதைவிட, வேறு பல செயல்கள் உடலுக்குள் நிகழ்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும், நமது உடல் வேறு செயல்களில் ஈடுபட்டிருக்கும்; அதாவது, களைத்த நிலையிலுள்ள உடல் உறுப்புகள், நரம்புகள், உடல் திசுக்கள் போன்றவற்றைக் குணமாக்கி, மறுசீரமைக்கிற செயல்கள் நடந்துகொண்டிருக்கும்.
தூக்கமென்பது ஐந்து நிலைகளைக் கொண்ட சுழற்சியையும், அதன்பின் மூளையின் செயல்கள் அதிகரிக்கிற சமயங்களையும் உள்ளடக்கியது. அந்நிலைகளாவன:
நிலை 1: நீங்கள் எப்போதாவது அரைத்தூக்க நிலையில் கார் ஓட்டியிருந்தால், இந்த இலேசான தூக்க நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள். அரைத்தூக்க நிலையில் இருக்கிற ஓட்டுனர்கள் திடீரென விழிப்பது சற்றுநேரம் இந்த நிலைக்குள் சென்று வந்ததற்கான அறிகுறியாகும்..
நிலை 2, 3, 4: இந்த நிலையில் மூளையின் செயல்பாடு குறைகின்றது. ஆனால் நிற்பதில்லை. ஆழமான தூக்கம் துவங்குகிறது. டெல்டா அலைகள் துவங்கி, தீவிரமடைகின்றன.
நிலை 5: இந்தத் தூக்கத்தில் வேக விழியியக்கமும், கனவு காணுதலும், கை-கால்கள் செயலிழத்தலும் (ஆகவே நாம் காண்கிற கனவுகளின்படி செய்யமுடிவதில்லை), அதிக இருதயத் துடிப்பும், அதிக இரத்த அழுத்தமும் காணப்படும். வேக விழியியக்கச் சமயத்தில் மூளை அலைகளின் பாணி கிட்டத்தட்ட விழிப்புநிலை போலவே இருக்கும்.
வேக விழியியக்க நேரம்தான் தகவல் செயலாக்கம், சேமித்தல்,மூளைத்திறன் மேம்படுதல் போன்றவற்றிற்கான நேரம் ஆகும்.
 

தூக்கத்தில் மெலட்டோனின் என்ன பங்கு வகிக்கிறது?

மெலட்டோனின் என்பது இருள் வரும்போது, பீனியல் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகிற ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் ஓர் எதிர்ஆக்ஸிகரணி; செல்களில் ஆபத்தை விளைவிக்கும் ஒற்றை மின்னணு உருபுகளிலிருந்து இது பாதுகாக்கின்றது. இது செல்களின் மிகமுக்கியக் கூறான டிஎன்ஏ சிதைந்துபோகாமல் தடுக்கிறது.டிஎன்ஏ சிதைவால் புற்றுநோய் போன்ற வியாதிகள் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. அடினோசின் எனும் ஹார்மோன் ஆசுவாசத்தைத் தூண்டி, தூங்குவதற்கு உதவுகிறது. ஆனால் கஃபீன் இந்த அடினோசினுக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பைத் தடுத்து, “விழிப்பைக்” கொடுக்கிறது; சோர்வு சம்பந்தப்பட்ட பாதிப்புகளிலிருந்து உடலைக் காக்கிற தன்மையைக் கெடுத்து விடுகிறது.

அற்புதமான ஆரோக்கிய உண்மை: அடினோசின் (Adenosine) என்னும் ஹர்மோனேகள் மனநிலையை அமைதி படுத்தி நாம் தூங்குவதற்கு உதவுகிறது. ஆனால் இந்த Caffeine அடினோசின் (Adenosine) ஹார்மோனுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை தடுத்து விடுகிறது. ஆனால் தூங்காமல் விழித்து இருக்க செய்து உடலின் சோர்வு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை தற்காக்கும் தன்மையை கட்டுப்படுத்திவிடுகிறது. 
 

நிம்மதியான இரவுத்தூக்கத்திற்கு ஏழு எளிய வழிமுறைகள்:

  1. சூரிய உதயமானதும் எழவேண்டும்: சூரியவெளிச்சம் விழிப்புணர்வை அதிகரிக்கிறது; செரட்டோனின் போன்ற ஹார்மோன்களை அதிகரிக்கிறது.
  2. தாவர அடிப்படையிலான கலப்புக் கார்போஹைடிரேடும், டிரிப்டோபானும் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும்: டிரிப்டோபான் அதிகமுள்ள உணவுகள் நல்ல தூக்கத்திற்குமட்டுமல்ல; பகல்நேரச் செயல்திறனுக்கும் உதவுகிறது. செரட்டோனின், மெலட்டோனின் உட்பட பல்வேறு ஹார்மோன்களின் உருவாக்கத்திற்கு டிரிப்டோபான் என்கிற அமினோ அமிலம் தேவைப்படுகிறது. டிரிப்டோபான் மூளைக்குள் செல்ல, கார்போஹைடிரேடு உதவுகிறது. டிரிப்டோபான் அதிகமுள்ள உணவுகள்: சோயாத்தயிர், பூசணிவிதைகள், குளூட்டன் மாவு, எள்ளுவிதைகள், வாதுமைக்கொட்டைகள், கருப்பு வால்நட், கருப்புத் தட்டைப்பயிறு.
  3. மிதமான உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவும்: இரவில் தூங்குவதற்கு உதவும் சில குறிப்பிட்ட ஹார்மோன்களின் அளவை உடற்பயிற்சி கூட்டுகிறது.
  4. தூக்கத்தைக் கெடுக்கும் பொருட்களான மதுபானம், கஃபீன், நிக்கட்டீன் போன்றவற்றைத் தவிர்க்கவும்: மதுபானம் உடலுக்குத் தேவையான ஆழ்ந்த உறக்கத்தைக் கெடுக்கிறது; அதேசமயம் கஃபீன் கிளர்ச்சியூட்டும் தன்மையினால் தூக்கத்தைக் கெடுக்கிறது. புகையிலை பயன்படுத்துவோர் இரவில் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதால் ஆழ்ந்த தூக்கத்தை இழக்கிறார்கள். மனச்சோர்வு நீக்கி மருந்துகளும், தூக்கமாத்திரைகளும்கூட வேக விழியியக்க தூக்க நிலைகளைக் குறைக்கமுடியும்.
  5. வழக்கமான நேரத்தில், சீக்கிரமே தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்: நள்ளிரவுக்குமுன் குறைந்தது இரண்டரை மணி நேரத்திற்குமுன்பே தூங்கச்செல்லவேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் பகலில் தூங்குவதாக இருந்தாலும் ஒரு வழக்கமான தூக்கப்பாணியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இரவு பணிமுறை வேலைக்குச் செல்பவர்கள் ஒரு வழக்கமான தூக்க/விழிப்புச் சுழற்சியை ஏற்படுத்தும்போது, அவர்கள் சிறப்பாகச் செயல்பட முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
  6. இருட்டில் தூங்கவேண்டும். மெலட்டோனின் செயல்திறனை அதிகரிக்க, முற்றிலும் இருட்டான இடத்தில் தூங்குவது முக்கியம்: பிரகாசமான ஒளி சில கணங்கள் பட்டால்கூட, அது மெலட்டோனின் அளவைக் குறைக்கமுடியும். 
  7. உங்கள் கவலைகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுங்கள்: உணர்ச்சிரீதியான அழுத்தமானது தூக்கத்தின் தரத்தைக் கெடுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இரவில் பிரார்த்தனைசெய்து, தங்கள் கவலைகளை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடுபவர்கள் நன்றாகத் தூங்குகிறார்கள். “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்: கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுவீர்“ (சங்கீதம் 4:8).

மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!