N.E.W.S.T.A.R.T.

Sunlight|சூரிய ஒளி

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்.” (ஆதியாகமம் 1:3, 4.).

Amazing Health Fact: சூரியன் மிகப்பிரமாண்டமானதும் பிரமிக்கவைக்கும் வெப்பம்கொண்டதுமான கதிர்வீச்சுக் கூடமாக இருக்கிறது. இதன் மேற்பரப்பின் வெப்பநிலை 11,000 டிகிரி ஃபாரன்ஹீட். இதன் உள்வெப்பம், 1.8 கோடி டிகிரி என்கிறார்கள் 

சூரியனின் நடுப்பகுதியில் ஒரு சதுர அங்குலத்திற்கு அழுத்தம் 7000 இலட்சம் டன்களாக உள்ளது. அணுக்களை நொறுக்கி, சூரியனின் மத்தியில் அணுப்பிணைப்பை ஏற்படுத்த அது போதுமானது ஆகும். அதன்மூலம் தொடர்ச்சியான வெளிச்சமும், வெப்பமும் கிடைக்கின்றன. இதன் மையப்பகுதி மிகமிகச் சூடாக உள்ளது; குண்டூசித்தலை அளவிற்கு அதிலிருந்து எடுக்கமுடிந்தால், அதன் வெப்பம் ஒரு மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மனிதனைச் சுட்டெரித்துவிடும். 

நல்லவேளையாக சூரியனிலிருந்து பூமி 9.3 கோடி மைல்களுக்கப்பால் பாதுகாப்பான இடத்தில் உள்ளது. சூரியனின் வெளிச்சம் பூமிக்கு வந்துசேர 8 நிமிடங்கள் 20 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது. அது வந்து சேரும்போது, அநேக நன்மைகளைச் செய்கிறது. 

வெளிச்சத்தின் நன்மைகள் என்ன? 

வாழ்க்கையின் எல்லாத் தேவைகளுக்கும் வெளிச்சம் அவசியமாயிருக்கிறது. பூமியில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் சக்தி அளிக்க தேவன் சூரியனை மூலப்பொருளாய் வைத்து இருக்கிறார். உங்களுடைய தோட்டத்தில் வளருகிற தாவரங்கள் பயன்படுத்தும் ஆற்றல், ஒரு சிறுத்தை உச்ச வேகத்தில் ஓடப் பயன்படுத்துகிற ஆற்றல், உங்களுடைய கார் ஓடுவதற்கு பயன்படும் எரிவாயு இவைகள் அனைத்திற்குமே சூரியன்தான் சக்தியைக் கொடுக்கிறது. 

சூரிய சக்திதான் இப்பூமியிலுள்ள அனைத்து இயற்கைச் சக்திகளுக்கும் மூலக்காரணமாக உள்ளது. 

வெளிச்சம் நல்லது என்று தேவன் ஆதியில் சொன்னாலும், அநேக மக்கள் இன்று சூரியவெளிச்சம் தங்கள்மேல் படுவதை எண்ணி அஞ்சுகின்றனர். அநேகமாக சூரியனைக்குறித்து தவறான கருத்துகளை நம்புவதால்தான், சூரியவெளிச்சத்தின் ஆபத்துகள்குறித்து அளவுக்கு அதிகமாக அஞ்சி, அதன் அநேக உடல்நலப் பலன்களை இழந்துவிடுகிறோம். “வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.” பிரசங்கி 11:7. 

 

சூரியவெளிச்சம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? 

தாவரங்களைப்போலவே, மனிதர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது. இருப்பினும், அநேகர் சூரிய ஒளி தங்கள் உடலில் படுவது தீங்கு விளைவிக்கும் என்று எண்ணுகின்றனர். உண்மையில், சூரிய ஒளி நேரடியாக உடலில் அதிகம் படுவதைத்தான் தவிர்க்கவேண்டும். 

In fact, in moderation, sunlight can …
    • பதற்றத்தைக் குறைக்கிறது.
    • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. 
    • வியாதிகளைத் தடுக்கிறது. 
    • தூக்கத்தை மேம்படுத்துகிறது. 
    • மனதின் செயல்திறனை அதிகரிக்கிறது. 
    • வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. 
    • கீழ்வாத வலிகளைக் குறைக்கின்றது. 
    • ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

உண்மையிலே மிதமான அளவு சூரியவெளிச்சம் நமக்கு நன்மை செய்கிறது: 

சூரியவெளிச்சத்தின் பல நன்மைகளுக்கு வைட்டமின்-டி காரணமாக இருக்கிறது. உடல்நலனை மேம்படுத்த அத்தியாவசியமான இந்த வைட்டமினை உடல் உற்பத்திசெய்வதற்கு, சூரியவெளிச்சதின் புறஊதாக் கதிர்கள் அவசியம் வேண்டும். 

எவ்வளவு நேரம் சூரியவெளிச்சம் தோலில் படவேண்டும்?

வெள்ளை இனத்தினருக்கு சுமார் ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள், வாரத்தில் மூன்று முறை நேரடிச் சூரியவெளிச்சம் படுவது போதுமானது. உங்கள் தோல் எவ்வளவு கருமையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக சூரியவெளிச்சம் பட்டால்தான் போதுமான அளவு வைட்டமின்-டி-யைப் பெறமுடியும். உங்கள் தோல் வெண்மையாகவோ, எளிதில் கருகிவிடுகிற தன்மை உள்ளதாகவோ இருந்து, சூரியவெளிச்சம் இயல்பாகவே அதிகமாக இருக்கும் இடத்தில் வாழ்ந்தால், சூரியவெளிச்சம் உடலில் படுவதை படிப்படியாக அதிகரிக்கவேண்டும். தோல் சிவந்தால், நீங்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்திருப்பீர்கள். 

வெள்ளைத் தோல் உள்ளவர்கள் கூடுமானவரை முதலில் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கவும்; பின்னர், சிறிது சிறிதாக அதிகரித்து, முப்பது நிமிடங்கள் அல்லது அதற்குமேல் படும்படி செய்யவும். நீங்கள் சூரியவெளிச்சத்தில் அதிக நேரம் இருக்கும்படி நேர்ந்தால், சுற்றிலும் அகலமாக இருக்கிற தொப்பி அணிந்திருக்கவேண்டும்; எளிதில் வெப்பத்தால் பாதிப்பு அடையக்கூடிய முகம், காது, கழுத்து, தோள்கள், முதுகு போன்றவற்றை மறைக்கிற ஆடைகளையும் அணிந்திருக்கவேண்டும். கவனமிருக்கட்டும்: புற ஊதாக் கதிர்களைக் குறைக்கிற சூரிய ஒளித் தடுப்பான்கள், சன்னல்கள் போன்ற தடுப்புகள் உங்கள் உடலில் வைட்டமின்-டி உற்பத்தியாவதைத் தடுக்கக்கூடும். 

அற்புதமான ஆரோக்கிய உண்மை: 90 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு உள்ளது. 
நல்ல விஷயமும் அளவுக்கு அதிகமானால்  …

சூரியவெளிச்சத்தையும் மிதமாகப் பயன்படுத்துவதே பாதுக்காப்பானது. சூரியவெளிச்சத்தால் தோல் கருகும்போதெல்லாம், புரதச்சத்தும் மரபணு திசுக்களும் சிதைந்து, தோல் புற்றுநோய் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கின்றன. 

இருப்பினும், சரியான சூரிய ஒளியைப் பெறுவதிலிருந்து இது உங்களைப் பயமுறுத்த வேண்டாம்! தோலைக் கருக்கத் தேவையான சூரியவெளிச்சத்தில் கால் பகுதி அளவு உடலில் வைட்டமின்-டி உற்பத்திசெய்ய போதுமானது. 

தோல் புற்றுநோயால் அமெரிக்கா நாட்டில் ஒரு வருடத்தில் சுமார் 2,000 பேர் இறக்கின்றனர்; ஆனாலும் மிதமான அளவு சூரியவெளிச்சம் படுவதால், ஒவ்வொரு வருடமும் உண்மையில் 1,38,000 பேர் மற்ற வகை புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

அற்புதமான ஆரோக்கிய உண்மை: 10 முதல் 15 நிமிடங்கள் சூரியவெளிச்சதில் இருப்பது வைட்டமின்-டியைப் உருவாக்க போதுமான நேரமாக இருப்பதாக தேசிய சுகாதார மையம் தெரிவிக்கிறது.