N.E.W.S.T.A.R.T.

Temperance|இச்சையடக்கம்

“தேவனாகிய கர்த்தர் மனுஷனைநோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்.அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (Genesis 2:16, 17 NKJV).

அற்புதமான ஆரோக்கிய உண்மை: சில கடல் பிராணிகள் விநோதமாக மயக்கும்வகையில் பார்ப்பதற்கு ஜெல்லி மீன்களைப்போலவே காட்சியளிக்கின்றன.இந்த வினோதமான வழவழப்பான உயிரிகளில் 97 சதவிகிதம் தண்ணீர் உள்ளது; பார்ப்பதற்குக் கண்ணாடிபோல இருக்கும்; அதனால்தான் “ஜெல்லி மீன்கள்” என்று அழைக்கப்படுகின்றன. 

அவை உயிரோடு இருப்பதே ஆச்சரியம்தான்; அவற்றுக்கு இருதயம் இல்லை, இரத்தம் இல்லை, செவுள் இல்லை, எலும்போ குருத்தெலும்போ இல்லை. சில ஜெல்லி மீன்களுக்கு கண்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதி செய்கின்றனர்; அவற்றிற்கு மூளை இல்லை என்கிற உண்மை. இது மேலும் ஆச்சரியம் தருகிறது. 

குமிழ்போன்ற அமைப்புக்குள் தண்ணீரை இழுக்கவும், பிறகு வெளியேற்றவும் விசேஷித்த தசைகளைப் பயன்படுத்தி, மேலும்கீழும் ஜெல்லி மீன்கள் அசைகின்றன; ஆனாலும் தாங்கள் செல்லவேண்டிய இடத்தை அவை தீர்மானிக்கமுடியாது. 

இவைகள் கடலில் காற்றும் நீரோட்டமும் செல்லுகின்ற திசையில் செல்லும் தன்மை கொண்டவை. 

ஆனால் ஜெல்லி மீன்களைப்போல அல்லாமல், மனிதனுக்கு மூளையும், தெரிந்துகொள்கிற பகுத்தறிவும் தேவன் கொடுத்திருக்கிறார். 

 

தேவன் தாம் சொல்வதை உண்மையிலேயே அப்படித்தான் சொல்கிறாரா? 

ஆதியில் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஜீவவிருட்சத்தின் கனியையும் தோட்டத்தில் உள்ள மற்ற கனிகள் அனைத்தையும் உண்பதற்கு உரிமை அளித்தார். ஆனால் ஒரு விருட்சத்தின் கனியை சாப்பிடவேண்டாம் என்று, ஏன், அதைத் தொடக்கூட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். இந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சமானது தோட்டத்தின் மத்தியில் இருந்தது; அது மெய்ப்பற்று அல்லது கீழ்ப்படியாமையைத் தெரிந்துகொள்வதற்கான ஓர் அடையாளமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, தங்கள் புத்தியைத் தெளிவாக்குவதற்கும் உணவுக்கும் இந்தக் கனி நல்லது என்று நமது முதல் பெற்றோர்கள் முடிவுசெய்தனர். 

அவர்கள் தேவனுடைய தெளிவான கட்டளைக்குச் செவிகொடுக்க மறுத்து, ஒரே கடியில், உலகத்திற்குள் பாவச் சுனாமியும், வேதனையும் பிரவாகித்து வருவதற்கு வழிசெய்தனர். விலக்கப்பட்ட அந்தக் கனி தற்போது நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், நம் மகிழ்ச்சியைக் கெடுத்து, நம் சுந்தரத்தைப் பறிக்கிற வேறு “விலக்கப்பட்ட கனிகள்” இருக்க வாய்ப்புள்ளதா? 

அற்புதமான ஆரோக்கிய உண்மை: மனிதனுடைய தெரிந்துகொள்ளுதலினால் பாவம் உலகில் பிரவேசித்தாக வேதாகமம் சொல்கிறது. ஆம், தேவனுடைய கற்பனைகளை மீறுவதுதான் பாவம் என்று வேதாகமம் அதற்கு விளக்கம் சொல்கிறது. 1 யோவான் 3:4. ஒரு துண்டுப் பழத்தை மனிதன் சாப்பிட்டதினால் அல்ல, தேவனுடைய நன்மையான ஞானத்திற்கும் ஆலோசனைக்கும் முரணாகக் கலகம்செய்வதற்குத் தீர்மானித்ததின் காரணமாகவே பாவம் பிரவேசித்தது. 
 

மூளையின் முன்மடல்

1848 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரயில் பாதை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த 25 வயதான ஃபினியாஸ் பி கேஜ் என்கிற ஊழியர் ஒரு துளைக்குள்ளாக வெடிபொருளை இரும்புக் கம்பியால் நிரப்பிக் கொண்டிருந்தபோது, அதிக சக்தி வாய்ந்த வெடி வெடித்ததில் சுமார் 5.85 கிலோ எடையுள்ள அந்தக் கம்பி, துப்பாக்கித் தோட்டாபோல அவருடைய தலையைத் துளைத்துச் சென்றது. அதிசயவிதமாக இந்த விபத்தில் ஃபினியாஸ் இறக்கவில்லை. உண்மையில், அவர் மீண்டும் உடல் வலிமைபெற்று, மேலும் 13 வருடங்கள் வாழ்ந்தார்.மனதளவில் அவர் ஆரோக்கியமாக இருப்பதுபோலத் தெரிந்தது; முன்புபோல அவரால் நன்றாகப் பேசவும், உழைக்கவும் முடிந்தது; அவருடைய ஞாபகச் சக்தியும் குறையாமல் இருந்தது.

ஆனாலும் அவர் முன்புபோல இல்லை என்று நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்தது. விபத்து நடப்பதற்குமுன்பு, அன்பானவராகவும், பொறுப்புள்ள பணியாளராகவும் கணவனாகவும் இருந்தார்; பக்திமானாகவும் நம்பத்தகுந்தவராகவும் இருந்தார்.

ஆனால் அந்த விபத்திற்குப்பிறகு ஃபினியாஸின் ஒழுக்கம் குறைய ஆரம்பித்தது. முன்கோபியாகவும், முரடராகவும், கெட்ட வார்த்தை பேசுகிறவராகவும் மாறினார். புகைபிடிக்கவும் மது அருந்தவும் ஆரம்பித்தார்; ஆவிக்குரிய விஷயங்கள் மேலிருந்த மதிப்பை இழந்தார். அவருடைய நல்லொழுக்கப் பகுத்தறிவு முற்றிலும் செயலிழந்து விட்டது போலத் தெரிந்தது.

உண்மையில் தீர்மானங்கள் எங்கே செய்யப்படுகின்றன?
நமது மூளையின் முன்மடல் பகுதிதான் பகுத்தறிவான, ஒழுக்கமான, நன்னெறியான தீர்மானங்களைச் செய்கிற முக்கியப் பகுதியாகும். மூளையின் அந்தப் பகுதிதான் நமது குணம், ஆளுமை, சித்தம் ஆகியவற்றை வரையறுக்கிறது. உண்மையில், நமது மூளையில் நம் ஆவிக்குரிய தன்மை அடங்கிய பகுதி முன்மடல்தான். ஆகவேதான், மூளையின் இந்தப் பகுதியை அழிக்க, அல்லது மங்கவைக்க சாத்தான் முயற்சித்துவருகிறான்.
 

அற்புதமான ஆரோக்கிய உண்மை: “லோபோடோமி” என்கிற வார்த்தையானது மூளையின் முன்மடல் செயல்பாட்டை அழிக்கிற அறுவைச் சிகிச்சைமுறையைச் சுட்டிக்காட்டுகிறது. 1900களின் ஆரம்பத்தில், முரண்மூளை நோய், தீவிர மனச்சோர்வு, பிற மனநலக் கோளாறுகள் போன்ற மனநோய்களைக் குணப்படுத்த இந்த அறுவைசிகிச்சை பிரபலமாக இருந்தது. சிறுபிராயக் கீழ்ப்படியாமைப் பிரச்சினையைச் சரிசெய்யவும் இது பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனாலும், மீண்டும் சரிசெய்யமுடியாத இந்தச் சிகிச்சையானது மனிதரின் தனித்தன்மையையும், பகுத்தறிகிற சுதந்தரத்தையும் பறிக்கிற ஒரு சிகிச்சையாக இருந்தது.

மூளையின் முன்மடல் செயலிழந்தால் என்ன நடக்கும்?
மூளையின் முன்மடல் சிதைவதால் முரண்மூளை நோய், பதற்றச்சோர்வு மனநோய், மன அலைக்கழிவுப் பிறழ்வு போன்ற எண்ணற்ற மனநோய்கள் உண்டாவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.மூளையின் முன்மடல் பாதிப்பினால் ஏற்படும் சில தாக்கங்கள்:
 
    • ஒழுக்க நியதிச் சீர்கேடு
    • சமூகச் சீர்கேடு
    • தொலைநோக்கு இன்மை
    • கருத்தியல் பகுத்தறிவு இழப்பு
    • கணிதத் திறன் குறைதல்
    • சுயக்கட்டுப்பாடு இல்லாமை (பெருமை, பகை, முரட்டுத்தனம்)
    • நினைவாற்றல் குறைபாடு (குறிப்பாக சமீபத்திய நிகழ்வுகள்)
    • கவனச்சிதறல், அமைதியின்மை,
    • உணர்ச்சித் தடுமாற்றம்
    • அக்கறையின்மை (முயற்சியின்மை),
    • தன் நிலைகுறித்து அலட்சியம் (எதிர்காலம்குறித்து அக்கறைகாட்டாமை) 

மூளையின் முன்மடல் பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள் என்ன?

மடல் சேதத்திற்கு முக்கியமான காரணமாயிருக்கின்றன. ஆனால், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைத் தேர்வுகளாலும் மூளையின் முன்மடல் சேதம் ஏற்படுகிறது என்பது திகைப்பைத் தருகிறது.
உதாரணமாக, வினைபுரி ஈரல் புரதம் அதிகமுள்ள பருமனான பெண்களுக்கு மூளையில் முன்மடல் சேதம் ஏற்படுவதாக ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. அழற்சி ஏற்பட இந்தப் புரதம் காரணமாகிறது; மேலும், உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறையுடன் நெருங்கிய தொடர்புடையது.
நச்சு ரசாயனங்களால் மூளையின் முன்மடலில் எளிதில் பாதிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக மதுபானம்,  …

மேலும் படிக்க வேண்டுமா? அமேசிங் ஹெல்த் பத்திரிகையை ஆர்டர் செய்ய எங்கள் வள பக்கத்தைப் பார்வையிடவும்!